Home astrology பெருந்தன்மையும்,மாறுபட்டு சிந்திக்கும் தன்மையும் கொண்டவர்கள்”தனுசு” ராசியினர்.

பெருந்தன்மையும்,மாறுபட்டு சிந்திக்கும் தன்மையும் கொண்டவர்கள்”தனுசு” ராசியினர்.

0

இவர்களின் ராசி நாதன் நவக்கிரகங்களில் முக்கியமானவரும் மிகுந்த மரியாதை உரியவரும் ஆகிய குருபகவான்.

மிக முக்கிய கிரகங்களான குரு,சூரியன், செவ்வாய் இவர்களுக்கு அனைத்து உதவியும் செய்வார்கள்.

தனக்காரகன் குருவே இவர்களின் ராசி நாதனாக வருவதால் பணம்,பொருள் பின்னால் ஓட மாட்டார்கள்.எப்போதும் சமநிலை மனதுடையவர்கள்.

வாழ்வில் எவ்வளவு வசதி,புகழ் வந்தாலும் சாதாரணமாகவே இருப்பார்கள்.

பக்குவமானவர்கள் ஆனால் தன்னை பெரிதாக நினைக்காமல் மற்றவர்களின் மனதிற்கும்,உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

மிகப் பெரிய ஆளாக இருந்தாலும் இவர்களை சிறிய அளவில் அவமதித்தார் எனில், அவரை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்.

பணத்தை விட குணத்தை பெரிதாக நினைப்பார்கள்.மனித மனதை விரும்புவார்கள்.அன்புக்கு அடிபணிந்தவர்கள்.

இவர்களின் ராசி நாதனின் இன்னொரு பெயர் கோதண்ட குரு என்பார்கள் அதனால் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்பாராத போராட்டத்தை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி வாகை சூடுவார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version