வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி தொடக்க நாளில் 79 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்துள்ளது. நஜ்முல் உசைன் ஷான்டோ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 146 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மமுதுல் ஹசன் ஜாய் 76 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் முடிவில் முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்னுடனும், மெஹதி ஹசன் மிராஸ் 43 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.