Home Srilanka Science புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மருந்து ஒன்றை கொழும்பு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது

புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மருந்து ஒன்றை கொழும்பு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது

0

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

12 வருடங்களுக்கும் மேலான விஞ்ஞான ஆராய்ச்சியின் பின்னர் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சமீர ஆர். சமரக்கோன் தலைமையிலான குழுவினர் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்த போஷாக்கு மருந்தை புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு வழங்க முடியும் என்று பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சுமார் பதினைந்து வகையான புற்றுநோய் செல்களை இதன் மூலம் அழிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலைக்கு தீர்வாக, நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள அறிஞர்களின் ஆதரவைப் பெற்று, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவது அவசியம் என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version