திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்திலுள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பட்டமானது நேற்று (29) கந்தளாய் – பேராற்றுவெளி சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாயிலுள்ள 10இற்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்போது பேராற்றுவெளி சந்தியிலிருந்து, கந்தளாய் மணிக்கூட்டு கோபுரம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாக சென்றுள்ளார்கள்.
இதேவேளை விவசாயிகளுக்கு நெல்லுக்கான உரிய விலையினை தா, பசளையை மாணியமாக வழங்கு, உரிய பருவத்தில் நீரினை வழங்கு,விவசாயிகளை புறக்கணிக்காதே, விவசாயிகளே நாட்டின் செலாவாணி, போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும் ஏந்தியவாரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தின் போது ஐம்பதிற்க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.