Home Srilanka கிளிநொச்சியில் 4 பிள்ளைகளின் தந்தை விபத்தில் பலி!

கிளிநொச்சியில் 4 பிள்ளைகளின் தந்தை விபத்தில் பலி!

0

கிளிநொச்சியில் நேற்று (29) மாலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து திங்கட்கிழமை மாலை 4.00 மணியலவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து தர்மபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தியாகராசா சஞ்சீவன் (வயது 36) தருமபுரம் பகுதியைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version