Home Srilanka Politics ஆறுமுகன் தொண்டமானின் நினைவு முத்திரையும் கடித உறையும் வெளியிடு!

ஆறுமுகன் தொண்டமானின் நினைவு முத்திரையும் கடித உறையும் வெளியிடு!

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன நேற்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் மனைவி திருமதி. ராஜலட்சுமி தொண்டமான் ஆகியோருக்கு நினைவு முத்திரையும் கடித உறையும் வழங்கப்பட்டது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், அமைச்சர்களான நிமல் சிரிபால டி சில்வா ,கெஹெலிய ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, நஸீர் அஹமட், மனுஷ நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, சீ.பி ரத்னாயக்க, தபால் மா அதிபர் எஸ். ஆர். டபிள்யூ. எம். ஆர். பி சத்குமார மற்றும் ஆறுமுகன் தொண்டமானின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version