Home Srilanka தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்க யோசனை!

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்க யோசனை!

0

தனியார் பல்கலைக்கழக கல்விக்காக வட்டியில்லா கடனுதவியை வழங்கும் யோசனையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த போதிலும் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் வாய்ப்பைப் பெறத் தவறிய ஐயாயிரம் மாணவர்களுக்கு வருடாந்தம் குறித்த வட்டியில்லா கடனுதவி வழங்கப்படவுள்ளது.

குறித்த வட்டியில்லாக் கடனுதவி தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்தக் கடன் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு, 9 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் கிடைக்கும்.

மாணவர்களின் நாளாந்த செலவுக்காக 3 இலட்சம் ரூபா கிடைக்கப்பெறும். அவர்கள் தனியார் பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறைவு செய்ததும், இந்தக் கடனை வட்டி இல்லாமல் திருப்பிச் செலுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் கிடைக்கும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version