சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான IPL இறுதி போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி இன்று முழுமையாக விளையாட முடியாது போனால் நாளை மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்தில் மழை நிற்காமல் தொடர்வதால், போட்டி குறித்த முடிவு இரவு 10.10க்கு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. முந்திய போட்டிகளின் வரலாற்றின்படி, 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இதனை நடத்துவது என்றால் நாளை அதிகாலை 12.26க்குள் தீர்மானம் எடுக்கப்படும். அல்லது ஒரு சுப்பர் ஓவர் மாத்திரம் வீசி போட்டி முடிவை தீர்மானிப்பது என்றால் அதிகாலை 12.50க்குள் அந்த தீர்மானம் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சுப்பர்கிங்ஸ் துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராய்டு, ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதுவே தமது இறுதி போட்டியாகும் என அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சென்னையின் பயிற்றுவிப்பாளர் ஸ்ரெபன் ஃப்லமிங்கும் தமது ஓய்வை அறிவித்துள்ளார்.