யாழ். வலிகாமம் – தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்ட பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். வலிகாமம் – தையிட்டியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தொடர்ந்து இரு உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், குறித்த இடத்திற்குப் பெண் பொலிஸார் வராத போதும்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் தலைவியைக் கைது செய்யும் நோக்கத்தில் தாக்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைத்துள்ளன.