Home World வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நில நடுக்கம்

வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் நில நடுக்கம்

0

வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் 5.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

நிலநடுக்கம் நிலத்துக்கு கீழ் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும், ஹம்போல்ட் கவுண்டியின் கிராமப்புறங்களில் சுமார் 1,000 மக்கள் வசிக்கும் பெட்ரோலியாவிற்கு மேற்கே 108 கிமீ (67 மைல்) தொலைவில் ஏற்பட்டதாகவும் USGS தெரிவித்துள்ளது.

வடக்கு கலிபோர்னியாவின் மக்கள்தொகை குறைவாக உள்ள ஒரு சில நகரங்களும் லேசான நடுக்கத்தை உணர்ந்ததாக USGS தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவில் இவ்வாறான நிலநடுக்கம் ஏற்படுவது வழமையான ஒன்றாகும். டிசம்பரில் வடக்கு கலிபோர்னியாவில் கடலுக்கு 5 கிமீ (3 மைல்) தொலைவில் 6.4 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version