Home Srilanka Politics குடிவரவு – குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு

குடிவரவு – குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு

0

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவருக்கும் எவ்வித அசௌகரியமும் இன்றி தேவையான சேவையை வழங்குவதற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம்  ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கடந்த வாரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தற்போது தணிந்துள்ளதாகவும்  தெரிவித்தார்.

இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தரகர்களிடம் சிக்க வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிராந்திய அலுவலகங்களிலும் ஒரு நாள் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் பிரதான அலுவலகத்துக்கு  மட்டுமே மக்கள் அடிக்கடி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version