Home Srilanka Politics கடவுச்சீட்டு 3 நாட்களுக்குள் வழங்க புதிய முறை

கடவுச்சீட்டு 3 நாட்களுக்குள் வழங்க புதிய முறை

0

3 நாட்களுக்குள் கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை இன்று அழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சீன தூதரகத்தின் ஆலோசனையுடன் அவர் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version