இரண்டு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஆறு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனத்துக்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக யமுனா பெரேராவும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக ஆர். எம். டபிள்யூ. எஸ். சமரதிவாகரவின் நியமனத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் டிக்கிரி கே.ஜயதிலக்க தெரிவித்தார்.
அதற்கு மேலதிகமாக, மக்கள் வங்கியின் தலைவராக சுஜீவ ராஜபக்ஷவை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியதாக உதவிச் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் சேனவிரத்ன, தலதா அத்துகோரள, உதய கம்மன்பில, சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இலங்கை அணுசக்தி சபையின் தலைவராக பேராசிரியர் எஸ்.ஆர்.டி. ரோசா, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ரத்னசிறி கலுபஹன, மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனத்தின் தலைவராகப் பொறியியலாளர் ஏ.கல்கெடிய, பகிரங்க அரங்காட்டுகைச் சபையின் தலைவராக ஸ்டெல்லா மாரப்பன, இலங்கை தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக ஜயந்த விஜேரத்ன ஆகியோரின் நியமனத்துக்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.