நீரிழிவு நோயாளிகள் பலரும் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால் அதற்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் சர்க்கரைக்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் பிரான்செஸ்கோ பிரான்கா தெரிவிக்கையில், சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு இல்லாத பொருட்களை பயன்படுத்துவது, நீண்ட காலத்துக்கு உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவாது.
மாற்று பொருளாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் இன்றியமையாத உணவுப்பொருட்கள் ஆகிவிடாது. அவற்றில் ஊட்டச்சத்தும் இல்லை. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே உணவில் இனிப்பை முழுமையாக குறைக்க வேண்டும்.
எனவே பழங்கள், இனிப்பு இல்லாத உணவுகள், பானங்கள் போன்ற இயற்கையாக சர்க்கரையுடன் கூடிய உணவை சாப்பிடுவது உள்ளிட்ட பிற வழிகளை பயன்படுத்தி சர்க்கரை உட்கொள்வதை குறைக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.