மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொள்கலன் வாகனமொன்றும் பயணிகள் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் எல்லை அருகிலுள்ள டமுவாலிபாஸ் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தையடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றிக்கொண்டன, அதையடுத்து இரு வாகனங்களும் தீக்கிரையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.