Home World பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்ட ஜெலென்ஸ்கி சுனாக்கை சந்தித்தார்

பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்ட ஜெலென்ஸ்கி சுனாக்கை சந்தித்தார்

0

பிரிட்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி  பிரதமர் ரிசிசுனாக்கை சந்தித்துள்ளார். ரிசிசுனாக்கின் கிராமப்புற இல்லம் அமைந்துள்ள செக்கர்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜெலென்ஸ்கி சுனாக்கை சந்தித்துள்ளார்.

உக்ரைனிற்கான அவசர உதவி குறித்து பிரிட்டிஸ் பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜெலென்ஸ்கி  தெரிவித்துள்ளார்.

நீங்கள் நிறைய செய்தீர்கள் உங்கள் அரசாங்கமும் மாட்சிமை பொருந்திய மன்னரும் உங்கள் மக்களும் உங்கள் சமூகமும் நிறைய பங்களிப்பினை செய்துள்ளனர் அதற்காக நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம் என ரிசிசுனாக்கின் சேர்ந்து நின்றபடி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கியின் தலைமைத்துவம் அனைவருக்கும் ஒரு உத்வேகம் என ரிசிசுனாக் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version