அடுத்த சில மாதங்களில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 32,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையாகும் என அதன் நிபுணர் வைத்தியர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மேல் மாகாணத்தில் 50 வீதமான டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரை 16 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேராவின் அறிவுறுத்தலுக்கமைய டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 40 சிறுவர்கள் தற்போது சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு நோயிலிருந்து மீண்ட பிள்ளைகள் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாகலாம்.எனவே பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.