Home Srilanka கிழக்கு மாகாண ரயில் சேவை பாதிப்பு 

கிழக்கு மாகாண ரயில் சேவை பாதிப்பு 

0

சீதுவை நோக்கி கோதுமை மா ஏற்றிச் சென்ற ரயிலொன்று இன்று அதிகாலை மஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இதனால் கிழக்கு ரயில் பாதையின் பல ரயில் சேவைகளுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி இயக்கப்படும் இரவுநேர அஞ்சல் ரயில் சேவையும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படும் புலத்திசி நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவையும் மற்றும் மஹவயில் இருந்து மட்டக்களப்பு வரை இயக்கப்படும் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

ரயில் தடம் புரண்டதால் தண்டவாளம் சேதமடையவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version