குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அந்த அறிவிப்பில், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக தமது அலுவலகத்திற்கு வருகை தருவதற்கு முன்னர், பொதுமக்கள் முன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
அலுவலகத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கவும், சேவைகள் சிறப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மேற்கண்ட நடவடிக்கை திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.
முன் பதிவுகள் மேற்கொள்ளாது திணைக்களத்துக்கு வருகை தருபவர்களுக்கு அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டியவர்கள் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னர் முன் பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.