Home World துனீஷியாவின் யூத தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு

துனீஷியாவின் யூத தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு

0

துனீஷியாவிலுள்ள யூத தேவாலயமொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யாத்திரிகர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்துள்ளார்.

ஆபிரிக்க நாடான துனீஷியாவின் ஜேர்பா தீவிலுள்ள காரிபா எனும் யூத தேவாலயத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆபிரிக்காவின் மிகப் பழைமையான யூத தேவாலயத்துக்கு இஸ்ரேல், மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கையான யாத்திரிகர்கள் வருவது வழக்கமாகும்.

இந்நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அங்கு நேற்று தாக்குதல் நடத்தியுள்ளார். அவர் முதலில் சக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு, அவரின் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, யாத்திரிகர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக துனீஷியாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் 2 யாத்திரிகள் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். 30 வ யதான துனீஷியர் ஒருவர், 42 வயதான பிரஞ்சுப் பிரஜையொருவரே கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 6 படையினரும் 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் எனவம் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version