Saturday, December 28, 2024
HomeSrilankaஒரு வார வேலை நிறுத்தம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஒரு வார வேலை நிறுத்தம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எதிர்வரும் செவ்வாய்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், ஒரு வார கால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன மேலும் தெரிவிக்கையில், செவ்வாய்க்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலில் நல்ல பதில் கிடைக்கும் என நம்புகின்றேன்.

“நேற்று இரவு 12 மணியளவில் அடையாள வேலைநிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக முடிவடைந்தது. அமைச்சின் செயலாளர் தலையிட்டு ரயில்வே பொது மேலாளருக்கு அறிவுறுத்தல் வழங்குவார் என நம்புகிறோம். அமைச்சர் செவ்வாய்கிழமை எங்களிடம் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை வழங்கியுள்ளார். தீர்வு கிடைக்கவில்லை என்றால் எந்தவொரு நேரத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நாம் தயாராக இருக்கிறோம். “

கேள்வி – சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றால், அடுத்த வாரம் வேலைநிறுத்த வாரமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

“அந்த நிலைக்கு தள்ளப்பட மாட்டோம் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு வார வேலைநிறுத்தம் ரயில்வே துறையின் எதிர்காலத்திற்காக இருந்தால், அது எங்கள் உறுப்பினரின் எதிர்காலத்திற்காக இருந்தால், அந்த வாரத்தை நாங்கள் செலவிட தயங்க மாட்டோம்.”

ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஒருவருக்கு எதிராக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் நேற்று (10) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

ரயில்வே திணைக்களத்தின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பதவிக்கு தகுதியற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி, நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக 10 அலுவலக ரயில்கள், 5 நீண்ட தூர ரயில்கள் மற்றும் 7 இரவு தபால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

வேலைநிறுத்தம் காரணமாக ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில இடங்களில் பயணச்சீட்டு கூட வழங்கப்படவில்லை.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக ரயில் நிலையங்களுக்கு வந்தவர்களும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments