ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாட்டை கண்டித்து அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
8 பக்கங்கள் கொண்ட குறித்த கடிதத்தில் கட்சியின், பொதுச் செயலாளருக்கும் அமைப்பாளர் ஒருவருக்கும் இடையிலான தொலைப்பேசி கலந்துரையாடல் தொடர்பில் கருத்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த கலந்துரையாடலில் பொதுச் செயலாளர் தாம் தொடர்பில் தெரிவித்த விடயங்களில் ஆச்சரியப்படுவதற்கில்லை என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கட்சியின் அரசியல் குழுவிற்கும் மத்திய குழுவிற்கும் அனுப்பி வைக்குமாறு கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.