கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் மூலம், நுளம்புகள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.