தரம் 5 இற்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.
இந்தப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுகின்றனர் என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தரம் 5 இற்கான புலமைப் பரிசில் பரீட்சை ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வடக்கில் இம்முறை 71 இணைப்பு நிலையங்களும் 209 பரீட்சை மண்டபங்களும் செயற்படவுள்ளன. இவ்வாறு செயற்படும் பரீட்சை மண்டபங்களிலேயே இந்த 18 ஆயிரத்து 759 மாணவர்களும் தோற்றவுள்ளனர்.
இதேநேரம் வடக்கில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் யாழ்ப்பாணம் 1 வலயத்தில் 12 இணைப்பு நிலையங்களின் கீழ் 41 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 782 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றும் அதேநேரம் யாழ்ப்பாணம் 02 வலயத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 54 பரீட்சை நிலையங்களில் 5 ஆயிரத்து 208 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2ஆயிரத்து 219 மாணவர்களும், முல்லைத்தீவில் 9 இணைப்பு நிலையங்களின் கீழ் 24 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 162 மாணவர்களும், வவுனியா மாவட்டத்தில் 14 இணைப்பு நிலையங்களின் கீழ் 34 பரீட்சை நிலையங்களில் 3 ஆயிரத்து 212 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.
அதேநேரம் மன்னாரில் 16 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 176 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.” – என்றார்.
………..