நான்கு வருடங்களுக்கு முன்னர், மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்ட ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகளால் 80 கிராம் ஹெரோயின் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பினை வழங்கியதாக “அத தெரண” நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் குறித்த சிறைத்தண்டனையை அனுபவிக்கும் வகையில் பிரதிவாதிகளை ஈரானுக்கு நாடு கடத்த உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், பிரதிவாதிகள் அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.