மன்னார் பாப்பாமோட்டை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
முள்ளிக்கண்டல் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.