‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இன்று (23) மாலை தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் திகதி பிற்பகல் 2.35 மணிக்கு ‘சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியதாக இஸ்ரோ அறிவித்திருந்தது.