ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (19)
யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டார்.
யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.
வறண்ட காலநிலையினால் பூங்காவிலுள்ள வற்றிப்போன கிணறுகளுக்கு நீர் வழங்கும் நிகழ்ச்சியிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
யால தேசிய பூங்கா இலங்கையின் பழமையான பூங்காக்களில் ஒன்றாகும், மேலும் இலங்கைப் புலிகளை மிகச்சிறிய பகுதியில் காணக்கூடிய இடமாகும்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் மற்றும் காணி மற்றும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.