ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
இதில் அமிதாப்பச்சன், சர்வானந்த், பஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது விறுவிறுப்பாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 17 தொடங்குவதாக தெரிகிறது இப்படத்தின் பெயர் வேட்டையன் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் இமயமலையில் இருந்து வந்த பிறகு சில காலம் ஓய்வெடுத்த பிறகு இந்த பட படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.