தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டுகின்ற டெங்கு ஒழிப்பு வார செயற்பாடுகளிற்கு அமைவாக மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிலே சகல கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக டெங்கு ஒழிப்பு வார செயற்பாடுகளிற்கான சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த சிரமதான பணிகள் கிராம மட்ட அலுவலர்களினாலே பொது மக்களின் பங்களிப்புடனும் மற்றும் பொலிசார், மாந்தை கிழக்கு பிரதேச சபை என்பவற்றின் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த செயற்பாட்டின் இறுதியாக பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக சிறந்த டெங்கு அற்ற கிராமம் ஒன்றை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒத்துழைப்போடு தெரிவு செய்து விருதுகள் வழங்குகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையிலே பிரிவுகளிலே இடம் பெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகளினுடைய நிகழ்வுகளின் பதிவுகள்.