“தேசிய பாதுகாப்பு மாநாடு 2023” மே 17 ஆம் திகதி சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு குறித்த முதன்மையான சிந்தனைக் குழுவான இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனம் (INSS) மூன்றாவது முறையாக இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் இராணுவ அதிகாரிகள், சட்ட அமுலாக்க அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சிரேஷ்ட வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மூன்று கருப்பொருள் துறைகளில் தங்கள் முன்னோக்குகளை பகிர்ந்துக் கொள்வதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.