ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தோடா மாவட்டத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்பட பல்வேறு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.