Sunday, December 29, 2024
HomeWorldUS Newsதாடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கப் பெண்.

தாடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்கப் பெண்.

பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தாலே சங்கடப்படுவார்கள், ஆனால் மீக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண் ஒருவர்.

எரின் ஹனிகட் என்ற 38 வயதான பெண்ணே இந்த கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் ஹோர்மோன் சமநிலையின்மை பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார், இதனால் அவருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளும் வந்துள்ளன.

இதற்காக சிகிச்சைகள் பெற்ற நிலையிலும் தொடர்ந்து அவரது முகத்தில் தாடி வளர ஆரம்பித்தது.

பலமுறை சவரம் செய்தும் தாடி வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் அவர் தாடியை அகற்றுவதை நிறுத்தி விட்டார். அதோடு அதனையே சாதனையாக மாற்றுவதற்கும் முடிவு செய்தார்.

அவருக்கு சுமார் 30 சென்டி மீட்டர் அதாவது 11.8 அங்குலம் தாடி வளர்ந்தது. இதன் மூலம் ஒரு பெண்ணாக இவ்வளவு நீளமான தாடியை வளர்த்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

அவருக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த 75 வயது பெண் விவியன் வீலர் இந்த சாதனையை படைத்திருந்தார்.

அவருக்கு 25.5 சென்டி மீட்டர் தாடி இருந்தது.

இந்த சாதனை குறித்து பேசிய எரின் ஹனிகட் கின்னஸ் சாதனையில் இடம்பெறுவேன் என்று நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments