Saturday, December 28, 2024
HomeSrilankaமன்னார் மடுத் திருவிழாவுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

மன்னார் மடுத் திருவிழாவுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

மன்னார் மடுத் திருவிழாவுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நேற்று இரவு 11.30 மணியளவில் ஆலயப் பகுதியில் திடீர் என உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேச புதுக்கமம் பகுதியை நிரந்தர முகவரியாக கொண்ட ஜெகநாதன் டிரோன் வயது 27 (அன்னளவாக) என்று தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் மரணத்திற்கு பாம்பு தீண்டியது உட்பட பல காரணங்களை சிலர் தெரிவித்தாலும் உடற் கூற்று பரிசோதனையின் பின்னரே முழு விபரம் தெரிய வரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவர் மன்னார் மதஸ்தலம் ஊடகம் ஒன்றின் தொகுப்பாளர் என்றும் தெரிய வருகிறது.

இதே வேளை மன்னார் மடுத் திருத்தலம் பகுதியில் விஷப் பூச்சிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக நேற்றைய தினம் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments