இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சேனல் I , லைகா குழுமத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
அதற்காக மாதாந்தம் 25 மில்லியன் ரூபா இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட உள்ளது.
தொடர் நஷ்டம் காரணமாக சேனல் I ஐ தனியார் முதலீட்டாளரிடம் ஒப்படைக்க வெகுஜன ஊடக அமைச்சு முன்மொழிந்திருந்தது.
கிடைத்த அனுமதியின் அடிப்படையில், இந்த குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தானது.