Saturday, January 4, 2025
HomeSrilankaதீர்வைக் காண்பதற்கான கதவுகள் திறந்துள்ளன! தமிழ்க் கட்சிகளுக்குள்தான் குழப்பம்!

தீர்வைக் காண்பதற்கான கதவுகள் திறந்துள்ளன! தமிழ்க் கட்சிகளுக்குள்தான் குழப்பம்!

“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான கதவுகள் திறந்துள்ளன. ஆனால், தமிழ்க் கட்சிகள்தான் குழப்பத்தில் உள்ளன. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால்தான் அனைத்துக் கட்சிகளும் இணைந்து மூவின மக்களும் ஏற்கும் தீர்வை வென்றெடுக்க முடியும்.”

– இவ்வாறு ஆளும் தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்தும், அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பிலும் தமிழ்க் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் உள்ளன. முதலில் அவர்கள் ஒன்றுபட வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் திறந்த மனதுடன் பேச அவர்கள் முன்வரவேண்டும். தீர்வு விடயத்தில் ஜனாதிபதி வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகின்றார். அவர் மீது எவரும் குற்றம் சுமத்த முடியாது.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments