தற்போது முன்னனி கதாநாயர்களாக இருக்கக்கூடிய அஜித், விஜய்,சூர்யா,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைத்து பேருமே தன் ஆரம்ப கால படங்களில் ரஜினி சம்பந்தமாக ஒரு காட்சி இருக்கும்.
நாயகர்கள் ரஜினி போஸ்டரை கும்பிடுவது மாதிரியோ,அவருடைய படத்திற்கு போவது மாதிரியோ,அவரை நினைத்துக்கொண்டு சண்டை போடுவது மாதிரியோ ஏதாவது ஒரு இடத்தில் சூப்பர் ஸ்டார் இருப்பார்.
காரணம் அப்போதைக்கு ரஜினிக்கு இருந்த மாஸ்!
எல்லா நடிகர்களுக்கு தான் வளர்வதற்கு ரஜினிகாந்தை பயன்படுத்தி கொண்டார்கள்.
ஆனால் ரஜினிகாந்த் நடிக்க ஆரம்பித்த புதிதில் எம்.ஜி.ஆரையோ,சிவாஜியோ அல்லது அப்போதைய முன்னனி கதாநாயகர்களையோ தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளவில்லை அவர்களை பற்றிய காட்சிகளையோ தன் படத்தில் பயன்படுத்தவில்லை!
அவர் அப்பவே தனக்கென்று தனி பாதை,தனி ஸ்டைல் என தனியாக முத்திரை பதித்தார்.
அதனால் தான் ரஜினிகாந்த் 73 வயதிலும் இன்றும் சூப்பர் ஸ்டாராக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.