தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) மாலை சுழிபுரத்தில் மக்கள் தொடர் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் எனத் தெரிவித்தே குறித்த எதிர்ப்பு எழுச்சி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் எதிர்ப்பு எழுச்சி போராட்டத்தின் போது அரசே பறாளாய் முருகன் தமிழர் சொத்து ஆக்கிரமிக்காதே என கோசங்கள் எழுப்பப்பட்டதோடு பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.