ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது விட்சன்டே தீவுகளுக்கு அருகில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் விமானக் குழுவை சேர்ந்த 4 பேர் பணியில் இருந்தனர். விபத்தில் சிக்கிய இவர்களை மீட்பு படை தேடி வந்தனர். இந்நிலையில், கடலுக்கு அடியில் மனித உடல் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ராணுவத்தின் கூட்டு நடவடிக்கைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் கிரெக் பில்டன் குயின்ஸ்லாந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” விபத்தில் சிக்கி காணாமல்போன 4 பேரின் உடல் பாகங்கள் நீருக்கடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் மேற்பரப்பில் இருந்து சுமார் 40 மீட்டர் (130 அடி) கீழே ஹெலிகாப்டரின் பாகங்கள் உள்பட இருந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை மனித உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட வாய்ப்பில்லை. வலுவான நீரோட்டம் மற்றும் மோசமான வானிலையால் தேடல் குழு முயற்சிகள் தடைபட்டுள்ளன. இது அடுத்த வாரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது, ஆனால் தேடுதல் குழுக்கள் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை” என்றார்.