யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானத்தை உடனே அகற்றக் கோரியும் தனியாருக்குச் சொந்தமான காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்த்தேசியமக்கள் முன்னணியினர் மீண்டும் இரண்டு நாள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் தையிட்டி விகாரைக்கு எதிராக இரண்டு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை தொடர்ச்சியாக போராட்டம் தொடரும் என முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.