Sunday, December 29, 2024
HomeWorldவிவசாயிகள் தலை துண்டித்து கொலை: நைஜீரியாவில் பயங்கரவாதிகள் கொடூரம்.

விவசாயிகள் தலை துண்டித்து கொலை: நைஜீரியாவில் பயங்கரவாதிகள் கொடூரம்.

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது போர்னோ நகரம். பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர். “நேற்று காலை அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் வந்தார்கள். வயல் வேலையில் இருந்த விவசாயிகளின் பண்ணைகளை நாசம் செய்தார்கள். பிறகு அவர்களை கொன்றார்கள்.

கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்” என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறினார். இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். (Islamic State of West Africa) எனும் அமைப்பும் அந்நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments