இந்திய அளவில் உச்ச நட்சித்திரமாக திகழ்பவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10 -ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்தே இருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள 75 இடங்களில் 136 காட்சிகள் திரையிடப்பட உள்ளதாம். தற்போது அங்கு 3,109 டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ள நிலையில் இதில் இருந்து $70,201 வசூல் செய்யப்பட்டுள்ளதாம். இது இந்திய மதிப்பில் ரூபாய் 57,74,716 என்பது குறிப்பிடத்தக்கது.