Saturday, December 28, 2024
HomeSrilankaமட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் கதிரையால் வெடித்த சர்ச்சை!

மட்டக்களப்பில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தில் கதிரையால் வெடித்த சர்ச்சை!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (25.07.2023) அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதில் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த கூட்டத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் பல்வேறுபட்ட மட்டங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஓரங்கட்டப்பட்டாரா என்ற சந்தேகம் இருக்கிறது.

குறிப்பாக ஆளுநர் இணைத்தலைவராக இருக்கின்ற போது அவருக்கான இருக்கை மத்திய பகுதியில் வழங்கப்படுவது கடந்த காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற மரபாக இருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு மாகாண ஆளுநருக்கும் மத்திய அமைச்சருக்கும் இடையிலான சிலவேறுபட்ட அரசியல் ரீதியான விடயங்கள் இருக்கின்றன. மத்திய அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் பிரதிநிதியாக அரசியல் யாப்பின் படி ஒரு மாகாணத்தின் குட்டி ஜனாதிபதி என்றே ஒவ்வொரு ஆளுநர்களும் அழைக்கப்படுகின்றனர்.

13ஆம் திருத்தச் சட்டத்தில் மாகாண அரசின் தலைமை பொறுப்பினையும் அவரே வகிக்கின்றார். மகாணசபைகள் கலைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஆளுநர் முழுமையான அதிகாரம் உடையவராக இருக்கிறார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஓரங்கட்டப்பட்டாரா அல்லது அவரை திட்டமிட்டு அவமரியாதை செய்ததா மாவட்ட செயலகம்?

ஏனெனில் மத்திய பகுதியில் ஆசனங்கள் வழங்கப்படுகின்ற போது மத்திய பகுதியில் ஆளுநருக்குரிய இருக்கை வழங்கப்பட வேண்டியது மரபு. அந்த மரபு இங்கு மீறப்பட்டிருக்கிறது.

ஆளுநர் ஒரு ஓரமாக இருந்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவமே இன்று வரை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் அங்கிருந்த இணைத்தலைவரான சிவனேசத்துரை சந்திரகாந்தன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதோடு, அங்கிருந்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கூட இந்த விடயத்தில் எந்தவொரு கரிசனையையும் காட்டாத நிலைமை இருந்திருக்கிறது.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஒரு பிரதேசம் சார்ந்த விடயங்களையே பிரதேச அபிவிருத்திக்குழு போன்று அதனை நடத்த முற்பட்டுள்ளமை பல்வேறுபட்ட தரப்பிடமும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நசீர் அஹமட் ஆளுநரை நோக்கி மிகவும் அநாகரீகமற்ற முறையில் விரலைச் சுட்டிக்காட்டுகின்ற போது சிவனேசத்துரை சந்திரகாந்தன் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தமையும் பல்வேறு தரப்புக்களையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.

அரச ஒழுங்கு நடைமுறை

சுற்றாடல் அமைச்சர் தனிப்பட்ட சிக்கல்கள் மற்றும் தனிப்பட்ட ரீதியில் இருக்கக்கூடிய கசப்புக்களை தீர்த்துக் கொள்வதற்காக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தை பயன்படுத்தினாரா என்று அரசியல்நோக்கர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

இலங்கையின் சட்ட ரீதியான அதிகார ஒழுங்கு(Current Order Of Precedence)

1. President of Sri Lanka

2. Prime Minister of Sri Lanka

3. Speaker of the Parliament

4. Chief Justice of Sri Lanka

5. Provincial Governors (within their respective provinces)

6. Ambassadors and High Commissioners

7. Members of the Constitutional Council

8. Attorney General of Sri Lanka

9. Judges of the Court of Appeal

10. Members of the Parliament

11. Secretary to the President

12. Secretary to the Prime Minister

13. Secretary to the Cabinet of Ministers

14. Auditor General of Sri Lanka

15. Chief of the Defence Staff

16. Heads of the Armed Forces, the Police and the Solicitor General

17. Visiting Sri Lankan High Commissioners, Ambassador and Charges de Affaires

18. Additional Secretaries to the Prime Minister

19. Additional Secretaries to the Ministries

இலங்கையின் சட்ட ரீதியான அதிகார ஒழுங்கு மேற்கண்டவாறே காணப்படுகின்றது.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் ஆளுநரின் இருக்கையில் அமைச்சர் அமர்ந்தமை, இலங்கையின் சட்ட ரீதியான அதிகார ஒழுங்குகளை மீறிய செயற்றபாடாகும்.

மேலும் ஒட்டுமொத்தத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் இருக்கைகள் வழங்குகின்ற போது ஆளுநரை அவமரியாதை செய்தமை தெட்டத்தெளிவாக தெரிகிறது.

ஒட்டு மொத்தத்தில் இருக்கைகள் வழங்கப்படுகின்ற போது பொதுவான நடைமுறை அரச ஒழுங்கு நடைமுறை பின்பற்றப்படாமல் ஆளுநர் திட்டமிட்டு அந்த இடத்தில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விடயத்தை இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் பார்த்துக் கொண்டு இருந்தமை தான் இங்கு வேடிக்கைக்குரிய விடயமாக இருக்கிறது எனச் சுட்டிக் காட்டப்படுகிறது.

இனிவரும் நாட்களில் ஆளுநருக்கு உரிய உரிய இருக்கைகளும், உரிய மரியாதையும் வழங்கப்படுமா அல்லது தொடர்ச்சியாக ஆளுநருக்கு இப்படியான சிக்கல்கள் எழுவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.

அமைச்சர் நசீர் அஹமட் கூட்டத்திற்கு முன்னர் சென்று, அமைச்சரின் இருக்கையில் அமர்ந்துக்கொண்டுள்ளதுடன் அதனை அவதானித்த ஆளுநர் இருக்கை தொடர்பில் எதுவும் முரண்படாது பெருந்தன்மையுடன் வேறு இருக்கையில் அமர்ந்துக்கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments