Saturday, December 28, 2024
HomeSrilankaகிளிநொச்சியில் சிறுவர் உரிமைகள் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் சிறுவர் உரிமைகள் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு!

கிளிநொச்சி நகர்ப்பகுதியில் World Vision நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமைகள் தொடர்பான மாபெரும் விழிப்புணர்வு நடவடிக்கை இன்று(26) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

“சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்றலில் இருந்து காலை 9.00மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த விழிப்பணர்வு ஊர்வலம், கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகம் வரை சென்றிருந்தது. இதன்போது கலந்து கொண்டிருந்தவர்கள் சிறுவர் உரிமைகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

தொடர்ந்து, கிளிநொச்சி சேவைச் சந்தை வளாகத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. கலாலையா கலையரங்கத்தினரால் சிறுவர் உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வு நாடகமொன்று அரங்கேற்றப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் உரையினைத் தொடர்ந்து, சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மேலும், World Vision நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட “சிறுவர்களின் உரிமைக் குரல்” விழிப்புணர்வுப் பாடல் ஒன்றும் இந்நிகழ்வில் வெளியீடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன், கரைச்சி பிரதேச செயலாளர் பா.ஜெயகரன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாதர சேவைகள் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி, கிளிநொச்சி பொலிஸ் நிலைய சமூக சேவைகள் பிரிவின் பொறுப்பதிகாரி, World Vision நிறுவன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பசுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், கிராம சேவையாளர்கள், கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

World Vision(உலக தரிசன நிறுவனம்) சிறுவர்களின் முழுமையான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான சேவை செய்யும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமானது கிளிநொச்சி மாவட்டத்தில் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments