13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திட்டம் !!!
13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வையும் அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.