அக்குரஸ்ஸை, அமலகொட பகுதியில் வீசிய காற்றில் கராஜ் ஒன்றின் மீது மரம் ஒன்று வீழ்ந்த சம்பவத்தில் மூவர் மரணமடைந்துள்ளனர்.
பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் 73, 46. 34 வயதுடைய மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.