24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக் குழந்தையையும் கொடூரமான முறையில் படுகொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட உறவினரான முன்னாள் இராணுவ வீரர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் .
நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் நேற்று முன்தினம் (20) விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது
சந்தேகநபர் நேற்று தனது மனைவி வீட்டிற்கு வந்துள்ளார். அதை அந்த நபரின் மனைவியும் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் வரகாகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சந்தேகநபர் பதுங்கியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.