Saturday, December 28, 2024
HomeSrilankaகிழக்கு ஆளுநரின் நாகரிகமற்ற நடத்தைகளுக்கெதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி.

கிழக்கு ஆளுநரின் நாகரிகமற்ற நடத்தைகளுக்கெதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி.

மருத்துவர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாகரிகமற்ற நடத்தை கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), இவ்விடயத்தில் உடனடியாக ல்த்தீர்வு காணப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளது.

அரச மருத்துவர் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே கையொப்பமிட்டு அனுப்பியுள்ள இக்கடிதத்தில், தங்களது அண்மைக்காலத்தைய நாகரிகமற்ற செயற்பாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் எமது கிளைகளிலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

இத்தகவல்கள், கிழக்கு மாகாணத்தின் பல்வேறு கிளைகளிலிருந்தும் தனிப்பட்ட நபர்களாலும் குறிப்பாக, நிர்வாகத்தரத்திலுள்ள உத்தியோத்தர்களாலும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன.

ஆளுநரின் இவ்வாறான நடத்தையானது, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தர வைத்தியர்களிலும் திருப்தியற்றதும் விரும்பத்தகாததுமான சூழலை உருவாக்கியுள்ளது.

கடைசியில் இது சிறந்த சேவையைப்பெற்றுக் கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்துமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத்தீர்க்கும் வகையில் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவின் தலையீட்டை கிழக்கு மாகாணக்கிளை கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தமது அங்கத்தினர் மீதான ஆளுநரின் இது போன்ற நடவடிக்கைகள் தொடருமானால், தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கப்போவதாக எச்சரித்துள்ளது.

அத்துடன், ஆளுநரால் ஏற்பாடு செய்யப்படும் சந்திப்புக்களைப் பகிஷ்கரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னர், கிழக்கு மாகாண வைத்தியர்கள் மீதான உங்களது நடத்தைகளை மீளாய்வு செய்யுமாறு தங்களை வேண்டிக் கொள்வதற்கு தமது நிறைவேற்றுக்குழு ஏகமனமாக முடிவெடுத்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆளுநருக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தாங்கள் எவ்வித சாதகமான முன்னெடுப்புக்களையும் எடுக்காவிட்டால், உங்களது எதிர்காலச் செயற்பாடுகளுக்கெதிராக கிழக்கு மாகாணக்கிளை முன்னெடுக்கும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதே போன்று, இதற்கு முன்னர் காத்தான்குடி கல்வி வலய அதிகாரியொருவர் இடமாற்றப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் நஸீர் அஹமத் (எம்பி) ஆளுநரைக் கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments