தெற்கு ஐரோப்பாவில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக 15 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்ன்படி இத்தாலியின் ரோம், ப்ளோரன்ஸ் மற்றும் போல்க்கானா உள்ளிட்ட 15 நகரங்களுக்ககே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளும் அதிக பாதிப்பை எதிர்கொள்ள கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே , குறித்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளதுடன், முதியோர்கள் மற்றும் சிறார்களை வெப்பம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்று அதிகரித்து வீசும் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.