நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மாலைதீவுக்கு செல்லும் வழியில் இலங்கை விமான நிலையம் ஊடாக சென்றதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின் போது, எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை தங்களது உத்தியோகபூர்வ பேஸ்புக்கில் பதிவேற்றிய நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.